புத்தளம் - நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் அறுவர் சித்தி.
2022 தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி பணி மனைக்குட்பட்ட பு/ நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று ஆறு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
சித்திபெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்களால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பாடாசாலையின் அதிபர் என்.எம்.எம். நஜீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஆப்தீன் எஹியா கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.
வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள்
1. EHIYA AABDEEN AHKAM MASHARI - 168
2. MUHAMAD RAFEEK MOHAMED RASADH - 159
3. MOHAMAD RASMIN SAHRATH SHADHA - 153
4. MOHAMMADHU RISWI MOHAMAD RIMAS - 146
5. MOHAMAD RISVI RUSTHI AHAMAD - 146
6. ABDHUR RAWUF MUHAMMADH RAIHAN - 142
பாடசாலையிலிருந்து 128 மாணவர்கள் பரீட்சையில் தோற்றியதில் 58 மாணவார்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளதோடு, 102 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர்.
இதேவேளை பாடசாலைக்கும், ஊருக்க்கும் பெருமை சேர்த்த மாணவர்களையும், அதிபர், மற்றும் மிகவும் அர்ப்பணிப்புடன் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் பாடசாலை சமூகம், பாடசாலை அபிவிருத்திக் குழு ஆகியோர் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.
No comments