Breaking News

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கனமூலையில் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கி வைப்பு!

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச் சங்கம் மற்றும் புத்தளம் மாவட்ட லயன்ஸ் கிளப் அமைப்பினரும் இணைந்து இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு இன்று (04) கனமூலை தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தில் இடம்பெற்றது.


தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச்சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முஸம்மில் மற்றும் தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் தலைவரும், கனமூலை பெரிய பள்ளியின் தலைவாருமான அஷ்ஷேய்க் எச்.எச்.எம். நஜீம் (ஷர்கி) ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச் சங்க உறுப்பினர்கள், தாருஸ்ஸலாம் வைத்திய நிலைய நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இதன் போது சுமார் 131 பயனாளிகள் பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.















No comments

note