பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற 10 வருட பூர்த்தி விழா!.
புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி பணி மனைக்குட்பட்ட நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் 10 வருட பூர்த்தி விழா (27) திங்கட்கிழமை பாடசாலையின் அதிபர் என்.எம்.எம். நஜீப் தலைமையில் மிக விமர்சையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நூல் நிலையம், Audio Video அறை, மைதான நுழைவாயில் என்பன திறந்து வைக்கப்பட்டுள்ள்ளது.
இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக பாடசாலை உருவாக்கக் குழு தலைவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ். ஆப்தீன் எஹியா மற்றும் சிறப்பு அதிதிகளாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ், இலங்கை இஸ்லாமிய மையத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். ஷரூக் (கபூரி), மதுரங்குளி மேர்ஸி லங்காவின் பிரதிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். முனாஸ் அவர்களும், கௌரவ அதிதிகளாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான கே.எம்.எம். பைஸர் மரிக்கார், எம்.ஐ.எம். ஆஷிக், கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் எம்.எஸ்.சேகு அலாவுதீன், முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம். ஹனீபா, எஸ்.எச்.எம். ரபீக், Victory Fiber Export (Pvt) Ltd உரிமையாளர் எம்.ஐ.எம். ஐயூப்கான், S.K. Distributors உரிமையாளர் சீ.எம்.எஸ். தாவூத் ஆகியோருடன்,
காரியாலய அதிதிகளாக புத்தளம் வலய பிரதிக் கல்விப்பணிபாளர்களான ஏ.எச்.எம். அருஜுனா, ஆர்.எம்.ஐ.எம். அலிஜின்னா, எம்.ஏ.எம். அனீஸ்,புத்தளம் தெற்கு - கோட்டக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜீவிகா சந்திரசேகர, கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக், புழுதிவயல் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல்.ஏ. றிபாய்தீன், கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.எம்.எம். ஹனீபா, கொத்தான்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஹாரூன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் 10 வருட பூர்த்தியை முன்னிட்டு நல்லெழில் சஞ்சிகை பாகம் 2 வெளியிடப்பட்டது. நூல் அறிமுகத்தை கடையாமோட்டை தேசிய பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் ஏ.எச். பௌசுல் செய்தார். பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இதேவேளை தரம் 5 புலமைப் பரிசில் சித்திபெற்ற ஆறு மாணவார்களுக்கு பணப்பரிசும், நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments