Breaking News

பெருக்குவட்டான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கல்வி வளர்ச்சியில் அளப்பரிய சேவையாற்றியவர் அதிபர் ஏ.சீ.நஜிமுதீன்

✍️ ஏ.எச்.பௌசுல் ஆசிரியர்

இப்பிராந்தியதில் பன்முக ஆளுமை நிறைந்த அதாவது அதிபராக, ஆசிரியராக, சமூகசேவையாளராக, நண்பராக சிறந்த ஆலோசகராக, உளவளத்துறை நிபுணராகவே நான் அதிபர் நஜிமுதீன்  அவர்களை  கான்கிறேன்.


இப்பிராந்தியத்திலுள்ள பு/பெருக்குவட்டான் அல் - மின்ஹாஜ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கல்வி வளர்ச்சியில் அளப்பரிய சேவையாற்றியவர் என்பதில் எவ்வித ஐயம்முமில்லை. அவரின் சேவையை அல்லாஹ்தஆலா  பொருந்திக் கொள்வானாக.


அவரின் தியாகத்தையும், சேவையையும் கல்விச் சமூகம் முன்னுதாரணமாக கொள்ளப்படல் வேண்டும். அவருடைய சேவை காலத்தில் பு/பாலாவி முஸ்லிம் வித்தியாலயம், பு/கரைத்தீவு தேசிய பாடசாலையின் அதிபராக  கடமை புரிந்து இன்றுடன் (31 -12-2022)  33 வருட கால  சேவையை நிறைவு செய்து  ஓய்வு பெறும் அன்னாரை அல்லாஹ்தஆலா எதிர்காலத்தில் நிறைந்த தேகஆரோகியத்திலும் சகல வளங்களையும் பெற்று வாழ வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.


ஏ.எச்.பௌசுல் ஆசிரியர்.

கடையாமோட்டை தேசிய பாடசாலை.




No comments

note