Breaking News

புத்தளம் நகரபிதாவின் விஷேட அறிவித்தல்.!

பொது மக்களுக்கான  அவசர வேண்டுகோள்.! 


நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுதும் டெங்கு நோயாளர்கள் பாரியளவில் அதிகரித்துள்ளனர்.


புத்தளம் பிரதேசத்திலும் டெங்கு நோயின் தாக்கத்தினால் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். 


புத்தளம் பெரிய பள்ளி,  புத்தளம் நகர சபை, புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் முப்படையினரும் இணைந்து மேற்கொள்ளும் பாரிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை 04-01-2023 புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளன.  


எனவே பொதுமக்கள்  தமது சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைக்குமாறும் தமது வீடுகளிலுள்ள டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை சுத்தம் செய்யுமாறும், பரிசோதிப்பதற்காக வரும் சுகாதார அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் வேண்டிக்கொள்கிறோம்.


இன்ஷா அல்லாஹ் 2023.01.04ஆம் திகதிக்குப் பின்னர் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சுத்தம் செய்யப்படாத காணி மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் அறியத் தருகிறோம். 


பள்ளி மஹல்லாக்கள் தங்களது மஹல்லா பிரதேசங்களிலுள்ள வீடுகள் பொது இடங்கள் மற்றும் நீர் தேங்கும் பகுதிகளை சுத்தம் செய்யுமாறும் உங்களை அன்பாக கேட்டுக்கொள்கின்றோம் .


எம்.எஸ்.எம்.ரபீக்

நகரபிதா

புத்தளம்.




No comments

note