கனமூலை பெரிய பள்ளியின் கீழ் இயங்கும் கல்வி அபிவிருத்திப் பிரிவின் இரண்டாவது செயற்றிட்டம் நாளை ஆரம்பம்
கனமூலை பெரிய பள்ளியின் கீழ் இயங்கும் கல்வி அபிவிருத்திப் பிரிவின் இரண்டாவது செயற்றிட்டம் நாளை (25.01.2023) ஆரம்பம்.
கல்விப் பொதுத் தராதத்தில் கல்வி பயிலும் கணிதப் பாடத்தில் சித்தியடையத் தவறிய மாணவர்களுக்கான கணிதப்பாட செயற்றிட்டம் நாளை (25) காலை 6.00 மணிக்கு பு/கனமூலை மு.ம.வித்தியாலயத்தில் ஆரம்பமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.
இச்செயற்றிட்டத்தை கணிதப்பாட ஆசிரியர் இஃதிஸாம் (BSc) அவர்கள் வழிநடாத்த பொறுப்பேற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சித் திட்டத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்கு ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கிய கனமூலை பெரியபள்ளி நம்பிக்கையாளர் சபை பிரதம நிர்வாகி ஷெய்க் எச்.௭ச்.எம். நஜீம், செயலாளர் ஷெய்க் எம்.எச்.எம். இர்ஷாத், பொதுச் சபை செயலாளர் ஏ.ஜீ. இர்ஸால், பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம். ஹனீபா SDC செயலாளர் ஏ.ஆர்.எம். பஸ்லின் உட்பட அனைத்து கல்வி அபிவிருத்திப் பிரிவு அங்கத்தவர்களுக்கும் உளம் நிறைந்த நன்றிகள்.
அஷ்ஷெய்க் எம்.ஏ.எல்.எம். பஸ்லுல் பாரிஸ் (நளீமி)
செயலாளர்
கல்வி அபிவிருத்திப் பிரிவு
No comments