விருதோடை வட்டாரத்தில் ஐ.தே.கட்சி சார்பில் முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். ரபாத் அமீன் போட்டி
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றம் கல்பிட்டி பிரதேச சபைக்கான தேர்தலில் விருதோடை வட்டாரத்தில் முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினரும், ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார அவர்களின் புத்தளம் மாவட்டத்திற்குரிய முஸ்லிம் விவகாரங்களுக்கான செயலாளருமான ஏ.ஆர்.எம். ரபாத் அமீன் ஐ.தே.கட்சியில் போட்டியிட கையொப்பமிட்டார்.
இவர் சென்ற முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐ.தே.கட்சியில் போட்டியிட இடம் கொடுக்காத காரணத்தினால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் ஊடாக உறுப்பினரானார். மு.கா. கட்சியின் தலைமைக்கும், இவருக்கும் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் கட்சிக்கு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
1999 ஆம் ஆண்டு ஐ.தே.கட்சியின் அரசியலை ஆரம்பித்த இவர் 2001 ஆம் ஆண்டு விருதோடை கொத்தனி அமைப்பாளராகவும், 2008 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையும் ஐ.தே.கட்சியின் புத்தளம் மாவட்டத்திற்குரிய முஸ்லிம் விவகாரங்களுக்கான செயலாளராகவும், கட்சியின் புத்தளம் மாவட்ட ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றி வருகின்றார்.
இதேவேளை ஐ.தே.கட்சி கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பு மனு வழங்காமல் பாரிய அநீதி இழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments