Breaking News

பறகஹதெனிய தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களால் பாடசாலை சிறுவர் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கி வைப்பு

வாசிப்பின் மூலமாக நவீன சமூகத்தை உருவாக்குதல்" எனும்  பிரதான நோக்கக் கூற்றாக கொண்டு பறகஹதெனிய மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 2007 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர வகுப்பு நண்பர்களின் நிதி ஒதுக்கீட்டின் அனுசரனையுடன் பாடசாலையின் ஆரம்ப பிரிவு நூலகத்திற்க்கான ஒரு தொகை நூல்களை கையளிக்கும் நிகழ்வு 17.01.2023 செவ்வாய்க்கிழமை அன்று  இடம்பெற்றது. 


குறித்த தொகை நூல்களை வகுப்பின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டு எம்.எச்.எம். அசீன், எம்.எஸ்.எம். சாகிர், எம்.எஸ்.எம். சல்மான், எம்.ஐ.எம். சிப்ரான் மற்றும் எம்.எம். நசார், எஸ். ரஹ்மான் ஆகியோரால் கல்லூரியின் அதிபர் எம்.ஏ.எம். நசார் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது. 


பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவர்களின் நூலகத்திற்க்கு பிரதான தேவையாக காணப்பட்டு வந்த புத்தக தேவையை இணங்கண்டு இந்த செயற்திட்டத்தை முன்னெடுத்து நடாத்திய குறித்த வகுப்பின், பழைய மாணவர்களுக்கு தாம் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கல்லூரியின் அதிபர்  தெரிவித்ததோடு, மாணவர்களின் வாசிப்பு நலனைக் கருத்திக்கொண்டு சில பெற்றார்களும், நலன்விரும்பிகள் உட்பட பழைய மாணவர்களும்  நூல்களை கொடுத்து உதவி செய்கின்றனர். 


மேலும் இது போன்ற சிறந்த பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். என்று நூலகத்திற்க்கு பொறுப்பான ரவூபா ஆசிரியர் மற்றும் சிரீன் ஆசிரியர்  ஆகியோரும் தமது கருத்தை  தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.


- எஸ். றஹ்மான்.







No comments

note