Breaking News

புத்தளம் மாவட்டத்தில் " சித்தீக் சர்வதேச கலாபீடம் உதயம்."

வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட கனமூலையில் அமைந்துள்ள "சித்தீக் சர்வதேச கலாபீடத்தின் உதய தின விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று (15) கலாபீடத்தின் வளாகத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.


சித்தீக் கலாபீடத்தின் தலைவர் என்.எம். சித்தீக்  அவர்களின்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தலைமை உரை மற்றும் வரவேற்புரையை பு/கஜுவத்த முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபரும், கலாபீடத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான அஷ்ஷேய்க் இஸட். ஏ.ஸன்ஹீர் (கபூரி) நிகழ்தினார்.


இந்நிகழ்வில் விஷேட பேச்சாளராக உடதலவின்ன ஹக்கீமியா அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் - அல்ஹாபிழ் ஹிதாயத்துல்லாஹ் ரஸீன் (ரஹ்மானி) கலந்து கொண்டு விஷேட சொற்பளிவாற்றினார் மேலும் ஹக்கானியா அரபுக் கல்லூரியின் அதிபரும் சித்தீக் சர்வதேச கலாபீடத்தின் ஆலோசகருமான அஷ்ஷேக்-அல்ஹாபிழ் எம்.எச்.எம் லபீர் (முர்ஸி) சிறப்புறையாற்றினார்.


குறித்த நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தந்த வைத்தியர், மற்றும் அரபுக் கல்லூரியின் அதிபர்கள், பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள், சட்டத்தரணிகள், புதிய மாணவர்களின் பெற்றோர்கள், ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


மேலும் கனமூலை பெரிய பள்ளியின் தலைவரும். சித்தீக் கலாபீடத்தின் பிரதித் தலைவருமான அஷ்ஷேய்க் எச்.எச்.எம். நஜீம் (ஷர்கி) நன்றியுரை நிகழ்த்தினார்.


இதன் போது சித்தீக் சர்வதேச கலாபீடத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், கலாபீடத்தின் தலைவருமான  என்.எம்.சித்தீக் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு இக்கலாபீடத்திற்காக இரண்டு ஏக்கர் காணியை வக்ஃபு செய்த சம்சம் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ராசிக் அவர்களையும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எஸ்.எம்.எம். ஸபாக் (ஜவாதி)





















No comments

note