Breaking News

தென்கிழக்கு பல்கலையில்; புதிய வருடத்தை வரவேற்கும் நிகழ்வும் 2023 ல் கடமைகளை ஆரம்பித்தலும் மரநடுகையும்.

நூருள் ஹுதா உமர்

பிறந்துள்ள புதுவருடத்தை வரவேற்கும் நிகழ்வும் 30/2022 ஆம் இலக்க அரசாங்க நிருவாக சுற்றறிக்கைக்கு அமைவாக 2023 ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வும், மரநடுகையும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகார்த்த நூலக முற்றலில் 2023.01.02 ஆம் திகதி இடம்பெற்றது.


பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொடிருந்தார்.


அரச ஊழியர்கள் ஆண்டின் முதல் நாள் கடமைகளை ஆரம்பிக்கும் இன்றைய பொழுதில்  “நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு” என்ற தொனிப்பொருளின் கீழ் 2023-2048 அடுத்த இருபத்தைந்து வருடங்களுக்கான இலங்கையின் அபிவிருத்தி முன்னெடுப்புக்கு அமைவாக இந்த வருடத்தின் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.


நிகழ்வின் ஆரம்பத்தில் உபவேந்தரினால் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்வதற்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அரச சுற்று நிருபத்துக்கு அமைவாக தமிழ் மற்றும் சிங்களத்தில் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் மற்றும் பதில் நிதியாளர் ஆகியோரது வழிகாட்டலில் சத்தியப்பிரமான நிகழ்வும் இடம்பெற்றது.


நாட்டுக்கு ஏற்பட்டுள்ள  தற்போதைய சவால்கள் அதனை எதிர்கொள்ள அரசாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் அதனை அரச ஊழியர்கள் என்ற அடிப்படையில், நாங்கள் ஆற்றவேண்டிய கடமைப்பாடுகள் தொடர்பில்  உபவேந்தர் அவர்கள் உரையாற்றினார்.


இந்நிகழ்வுக்கு பீடாதிபதிகள், பதில் நிதியாளர், நூலகர், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பேராசிரியர்கள் திணைக்களங்களின் தலைவர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட  விரிவுரையாளர்கள், சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா உழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


மரநடுகை நிகழ்வு நூலகர் எம்.எம்.றிபாவுடீன் அவர்களது தலைமையில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.









No comments

note