இலங்கை Sepaktakraw அணியில் விளையாடும் புத்தளத்தின் இளம் வீரர்களின் வெற்றிக்காக உதவுங்கள்
இந்த டிசம்பர் மாதம் 24 முதல் 31 ஆம் திகதி வரை, பங்களாதேஷ் டக்கா தலைநகரில் நடைபெறும் ‘நான்காவது ஸெபக்தக்ரோ வெற்றிக் கிண்ண (4th South Asian Sepaktakraw Championship 2022) போட்டியில் புத்தளத்தைச் சேர்ந்த ஸெபக்தக்ரோ வீரர்களான 1. ஸகீ அஹ்மத் மற்றும் 2. அதீப் ஹஸன் 3. அஸ்ஹார் ஹுஸைன் (இரட்டையர்கள்) இலங்கை அணியில் விளையாடுவதற்குத் தெரிவாகியுள்ளனர்.
எனினும் பங்களாதேஷ் செல்வதற்கான விமான டிக்கட் - விசா கட்டணம் ஆகியவற்றை இந்த வீரர்களே திரட்டிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.
இவர்கள் மூவருக்குமான மொத்த பயண செலவு ரூபா ஆறு இலட்சத்து இருபத்தி இரண்டாயிரத்து ஐநூறு (622,500/=) என இலங்கை ஸெபக்தக்ரோ சங்கம் Amateur Sepaktakraw Association of Sri Lanka உத்தியோகபூர்வ கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளது.
சாதாரண வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த இவ்வீரர்களினால் இந்தளவு தொகையை திரட்டிக்கொள்ள முடியாத சங்கடத்தில் உள்ளனர் என புத்தளம் ஸெபக்தக்ரோ விளையாட்டுக் கழகம் KMP (Kumpulan Melayu Di Puttalam) தெரிவிக்கின்றது.
மேற்படி தெற்காசிய ஸெபக்தக்ரோ வெற்றிக் கிண்ண போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்யும் இளம் ஆட்ட வீரர்களின் பயண செலவுக்கு உதவுவதை இலங்கைவாழ் விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரும் கடமையாகக் கருதி நிதி உதவி வழங்குமாறு KMP கழகத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
டிசம்பர் 22 ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கை ஸெபக்தக்ரோ அணி பங்களாதேஷ் பயணமாகின்றனர்.
உங்கள் தாராள நிதி உதவியை KMP யின் உத்தியோகபூர்வ வங்கி கணக்கில் வைப்பு செய்யுமாறு KMP கழகத்தினர் வேண்டிக்கொள்கின்றனர்.
Malays Sports Club
100440402206
National Savings Bank - Puttalam
நீங்கள் வழங்கும் நிதி உதவி நமது தேசத்தின் பெயரையும் புகழையும் தெற்காசிய ஸெபக்தக்ரோ வெற்றிக் கிண்ண ஆடுகளத்தில் உயர்த்திப் பிடிக்கும் என புத்தளம் ஸெபக்தக்ரோ விளையாட்டுக் கழகத்தினர் உறுதியான நம்பிக்கையை தெரிவிக்கின்றனர்.
மேலதிக தகவல்களுக்கு
Shibly Marjan (Team Manager)
(+94) 0777414064
மதுரங்குளி மீடியாவின் சமூக ஊடக பங்களிப்புக்கும்,
ReplyDeleteபொதுவாக அனைத்து துறைகள் மீது கொண்டுள்ள அக்கறைக்கும்,
எங்கள் மகன்மார் மீது வைத்துள்ள அன்புக்கும்,
எங்கள் நன்றிகளும் பிரார்த்தனைகளும் உரித்தாகும், ஜஸாகல்லாஹ் ஹைரன்.
அன்புடன்,
அதீப் அஸ்ஹார் இரட்டையரின் குடும்பத்தினர்