காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு Digital Smart Board வழங்கி வைப்பு !
நூருல் ஹுதா உமர்
சேவை பெறுனர்களுக்கு தொடர்ந் தேர்ச்சியான விழிப்புணர்வை வழங்கும் நோக்கிலும் விசேட நிகழ்வுகளுக்கும் விவரனங்களுக்கும் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக டிஜிட்டல் தொலைக்காட்சி பெட்டி ஒன்றை வழங்குமாறு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா அமானுல்லா கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கைக்கு அமைவாக குறித்த டிஜிட்டல் தொலைக்காட்சிப்பெட்டியை வழங்குவதற்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் ரிபாஸ் மற்றும் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் பொறியியலாளர் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு வழங்கப்படும் சேவைகளை அவதானித்து குறை நிறைகளையும் கேட்டறிந்து கொண்டதுடன் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக பெறுமதியான டிஜிட்டல் தொலைக்காட்சி பெட்டியையும் வழங்கி வைத்தனர்.
No comments