கல்முனை அல்-பஹ்ரியாவில் உயர்தர தின நிகழ்வு
(சர்ஜுன் லாபீர்,எம்.என்.எம் அப் ராஸ்)
கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையின் உயர்தர மாணவர் தின நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம் பைசால் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மெடிலேன் வைத்தியசாலையின் பணிப்பாளரும்,கல்முனை முஹைத்தின் ஜும்மா பள்ளி மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ அஸீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் கணக்காளர் பிரபல வளவாளர் வை. ஹபிபுல்லா கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் சிறப்பு அதிதிகளாக பாடசாலையின் பிரதி அதிபர்களான எம்.ஏ அஸ்தர்,எம்.ஏ சலாம்,ஈ.றினோஸ்,பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி,கல்முனை பிரிலியன் விளையாட்டு கழகத் தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான எம்.எஸ்.எம் பழீல் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இதன் போது "சதசு" என்ற உயர்தர மாணவர்களின் சஞ்சிகையும் வெளியீடு வைக்கப்பட்டதுடன், பாடசாலையிலிருந்து கடந்த முறை பல்கலைக்கழகத்திற்க்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் அதிதிகளினால் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments