Breaking News

பதியமிட்டோருக்கான கெளரவமும், விளைந்த பயிர்களின் மீளிணைவும்.

(பாறுக் ஷிஹான்,சர்ஜுன் லாபீர், ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை தரம் 06 தொடக்கம் 11 வரை ஒரே வகுப்பில் (G-வகுப்பு) கல்வி கற்ற மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு இன்று (18) பாடசாலையின் காரியப்பர் மண்டபத்தில் தொழிலதிபரும், இக் கல்லூரியின் பழைய மாணவருமான எச்.எச்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் இம் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் பொன்னாடை போர்த்தி  கெளரவிக்கப்பட்டதோடு நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்களும்  வழங்கி  கெளரவிக்கப்பட்டனர். இதேவேளை இம்மாணவர்களினால் இக்கல்லூரியின் தேவை கருதி  கணனி ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டது.


இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஓய்வு பெற்ற மற்றும் தற்போதும் சேவையிலுள்ள ஆசிரியர்கள் தங்களின் கடந்தகால அனுபவங்களை இச்சபையில் பகிர்ந்து கொண்டனர். இங்கு கலை,கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதோடு மறைந்த ஆசிரியர்களுக்காக விசேட துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.


எதிர்வரும் காலங்களில் இப்பாடசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இவ்வகுப்பு பழைய மாணவர்களின் ஒத்துழைப்பும்,ஆதரவும் முழுமையாக இருக்கும் என்பதனையும் இம் மாணவர்கள் உறுதியளித்தனர்.

















No comments

note