Breaking News

திருகோணமலையில் இடம்பெற்ற உள்ளூர் நிதி திரட்டுதல் மற்றும் ஆதரவு திரட்டுதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை

அஸ்ஹர் இப்றாஹிம்

Wilde Ganzen Foundation /Change the Game Academy Netherlands நிதியுதவியில்  Assembly of social mobilization, srilanka நிறைவேற்று பணிப்பாளர் ஏ.யூ.அலாப்தீன் ஏற்பாடு செய்திருந்த  உள்ளூர் நிதி திரட்டுதல் மற்றும் ஆதரவு திரட்டுதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை   திருகோணமலை மாவட்ட செயலகத்திலுள்ள கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. 


 திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாகவும்  கொழும்பு நீர்ப்பாசன முகாமைத்துவ பிரிவு  பிரதிப் பணிப்பாளர் திரு. பண்டார கெளரவ அதிதியாகவும் , இலங்கை செஞ்சிலுவை சங்க திருகோணமலை கிளை செயலாளர் டொக்டர்  என்.ரவிச்சந்திரன் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.


IMD இன் வதிவிட திட்ட முகாமையாளர்களான கந்தளே திட்டம், அல்லை திட்டம் / சேருவில மற்றும் மஹதுவுல்வெவ திட்டம், மொரவெவ. அப்பிரதேச திட்ட முகாமையாளர் அலுவலகத்தின் கீழ் உருவான விவசாய அமைப்பின் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், கிராம அபிவிருத்தி சங்கம்  ,  பெண்கள் கிராம அபிவிருத்தி சங்க  தலைவர்கள் மற்றும் அவ்வமைப்பின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.




No comments

note