புத்தளம் முந்தல் பிரதேச ரெட்பானா கஜுவத்தை அஹதிய்யா சன்மார்க்கப் போதனா பாடசாலை அங்குரார்ப்பன நிகழ்வு
கஜுவத்தை அரசினர் முஸ்லிம் வித்தியாலய அதிபர் ஸட்.ஏ.ஸன்ஹீர் அவர்களின் தலைமையில் 23 ஆம் திகதி சனிக்கிழமை அஹதிய்யா சன்மார்க்கப் போதனா பாடசாலையின் அங்குரார்ப்பனம் மற்றும் நிர்வாக தெரிவுக் கூட்டமும் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் கிராத்துடன் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை அஹதிய்யா பாடசாலைகளின் மத்திய சம்மேளனத்தின் பிரதித் தலைவரும் தேசிய சபை உறுப்பினருமான பாரூக் பதீன் ஆசிரியர், விஷேட அதிதியாக கணமூலை தாறுல் ஹிக்மா அஹதிய்யா பாடசாலை ஆசிரியர் அஷ்ஷேய்ஹ் எம்.எஸ்.எம்.றிஸ்வான் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் ,பழைய மாணவர்கள், உலமாக்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அஹதிய்யா சன்மார்க்கப் போதனா பீட பாடசாலை அதன் பயன்கள் புதிய கட்டமைப்புக்கள் பற்றிய விளிப்பூட்டல் விளக்கங்கள் எடுத்துக் கூறப்பட்டன . கலந்துரையாடலின் பின்னர் அஹதிய்யா பாடசாலையின் 2023ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர்
ஏ.ரீ.எம்.பாஸில்
செயலாளர்
எஸ்.எம்.ஸப்ரின்
பொருளாளர்
அஷ்ஷேய்ஹ் ஏ.எப்.எம்.ஸர்ஜான்
உப தலைவர்களாக
அஷ்ஷேய்ஹ் ஸட்.ஏ.ஸன்ஹீர் அதிபர் கஜுவத்தை.அ.மு.வி
மற்றும் எஸ்.எம். அனஸ்
உப செயலாளர்
ஏ.கே.பஸ்மினா
உறுப்பினர்களாக ஏ.கே.எம். நதீர்,ஏ.எல்.நூறுல் ஹினாயா,எஸ்.றம்ஸினா, எஸ்.எம்.நவாஸ், எம்.ஐ. நஸார், அஹதிய்யா அதிபராக அஷ்ஷேய்ஹ் ஏ.ரீ.எம்.பர்மிலாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தகவல்
எம்.என்.எப்.நளீஸா அதிபர் மணல் குன்று அஹதிய்யா பாடசாலை மற்றும் மனித வள முகாமைத்துவக் குழு உறுப்பினர், புத்தளம்.
No comments