கனமூலை பெரிய பள்ளியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு.
கனமூலை பெரிய பள்ளி கல்வி அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு சென்ற (29) திகதி பெரிய பள்ளியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
க.பொ.த (சா/த) பரீட்சை எழுதி உயர்தரம் (A/L) கற்பதற்கு போதுமான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி கனமூலை பெரிய பள்ளியின் கல்வி அபிவிருத்திக் குழு ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு நாடளாவிய ரீதியில் தேர்ச்சி பெற்ற வளவாளர்கள் இருவர் மாணவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் பரீட்சைக்கு தோற்றிய பதின்மூன்று மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்
கனமூலை பெரிய பள்ளி கல்வி அபிவிருத்திக் குழு
No comments