புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான மற்றுமொரு இலவசக்கருத்தரங்கு
பறகஹதெனிய மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பில், நலன் விரும்பிகளின் அனுசரணையுடனும், தரம் 5 மாணவர்களின் பெற்றோரின் பூரண ஒத்துழைப்புடனும் தரம் 5 புலமைப் பரிசில் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இலவச புலமைப் பரிசில் கருத்தரங்கு அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
எமது பாடசாலையின் அதிபர் அவர்களின் விசேட உரையுடன் ஆரம்பிக்கப்பட்ட கருத்தரங்குக்கு 130 மாணவர்கள் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கின் வளவாளராக எம்.ஜி ஆரிப் (ஆசிரிய ஆலோசகர்,புத்தளம் கல்விப் பணிமனை) விரிவுரை வழங்கினார்.
தொடர்ந்தும் இவ்வாறான பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய உத்தேசித்துள்ள பறகஹதெனிய மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை) யின் பழைய மாணவர் சங்கமானது பாடசாலையின் கல்விசார் நடவடிக்கைகளுக்கு அனைத்து பழைய மாணவர்களையும் தம்முடன் அணி திரளுமாறு அன்புடன் அழைக்கின்றது.
No comments