சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய ஆசிரியை நூர்ஜஹான் பீவி கல்வி சமூகத்தால் பாராட்டி கெளரவிப்பு
அஸ்ஹர் இப்றாஹிம்
சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் கடமையாற்றி தனது 56 வயதில் ஆசிரியர் தொழிலில் 30 வருட சேவையை பூர்த்தி செய்து ஓய்வுபெற்றுச் சென்ற ஆசிரியை திருமதி நூர்ஜஹான் பீவி அலி அக்பர் அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா அண்மையில் பாடசாலை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் யூ.எல் நஸார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர் , சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் என்.எம்.அப்துல் மலீக் , முன்னாள் அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
No comments