இறக்காமம் அஷ்ரபியன்ஸ் தின 05 வருட நிறைவு விழாவும் பணி நிறைவு பெற்றுச் செல்லும் அதிபர்கள் கௌரவிப்பும்!
அஸ்ஹர் இப்றாஹிம்
அம்பாறை மாவட்டம் இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரியில் "அரிவரி கொரிவரி | மீண்டும் பள்ளிக்கு போகலாம்" அஷ்ரபியன்ஸ் தின 05 வருட நிறைவு விழா அஷ்ரப் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) முதல்வர் எம்.ஐ. மாஹிர் அவர்களின் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
1897 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 125 வருடங்களை பூர்த்தியாக்கும் அஷ்ரப் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) பழைய மாணவர்களை பாடசாலையோடு இணைத்து அதன் கல்வி வளர்ச்சியில் சமூகத்தை இணைப்பாக்கம் செய்து சமூகத்திற்கும் பாடசாலைக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தி கல்வி ரீதியாக மக்களை விழிப்படையச் செய்யும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
"உயரிய கல்வி ; பண்பட்ட சமூகம்" எனும் மகுட வாசகத்தினை அடிப்படையாக் கொண்டு 1979 - 2017 (ஆண்டு க.பொ.த. சா/த) வரையிலான 35 வகுப்பு மாணவர்களை ஒன்றிணைந்து இந்த "அரிவரி கொரிவரி | மீண்டும் பள்ளிக்கு போகலாம்" நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் 35 வகுப்புக்களும் பாடசாலை அபிவிருத்தி சார்ந்த முன்மொழிவுகளை முன்வைத்ததுடன் வெற்றிகரமாக செயற்படுத்தியும் வருகின்றனர்.
அஸ்றபியன்ஸ் தின 05 வருட நிறைவு விழாவில், கல்லூரியில் சேவையாற்றி பணி நிறைவு பெற்றுச் செல்லும் ஏ.எச். ஜசீன் , குறித்த பாடசாலையில் நீண்ட காலம் சேவையாற்றி அதிபராக தரம் உயர்ந்து றோயல் கனிஷ்ட கல்லூரி மற்றும் அல் அமீன் என்பவற்றில் பணி செய்து ஓய்வு பெற்றுச் செல்லும் ஐ.ஆர்.எம். ஐனுல் றிபாயா ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும் கே.எம்.ஆர். குறூப் மற்றும் 1999 அஷ்ரபியன்ஸ் அனுசரணையில் ரூபா 102,000.00 பெறுமதியான பாடசாலைக்கான பிளேசர்கள் (Blazers) அஷ்ரபியன்ஸ்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில், சிரேஷ்ட அஷ்ரபியன்ஸ்களான உப தவிசாளர் ஏ.எல். நௌபர் (மௌலவி), இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எம்.எல். முஸ்மி, பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எம். சியாத், பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.எல். நிசார், கோட்டக் கல்வி அதிகாரி யூ.எல். மஹ்மூட் லெப்பை , பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.ஆர்.எம். அமீன், பிரதி அதிபர் திருமதி ஏ.எம். இர்பானா, வாங்காமம் ஜீ.எம்.எம்.எஸ் வித்தியால அதிபர் ஏ.ஹாறுடீன், வாங்காமம் ஒறாபிபாஷா வித்தியால அதிபர் யூ.எல். தாஹிர் றோயல் கனிஷ்ட கல்லூரி அதிபர் எம்.ஏ. பஜீர், குடுவில் ஹிறா வித்தியாலய அதிபர். ஐ. பசீல், ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் எம்.எச்.வஹாப் (இஸ்லாஹி), ஜும்ஆ பள்ளிவாசல் உப தலைவர் ஏ.எல். ஜூஹிர், உறுப்பினர் ஏ.எல். தாஹா செயினுடீன் , பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், வகுப்புசார் பிரதிநிகள் எனப் பலரும்கலந்து சிறப்பித்தனர்.
No comments