Breaking News

வியட்நாம் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் மட்டு. நகரில் "வர்த்தக மேம்பாட்டு" கருத்தரங்கு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கொழும்பிலுள்ள வியட்நாம் தூதுவராலயம் ஏற்பாடு செய்துள்ள "வர்த்தக மேம்பாட்டு" கருத்தரங்கொன்று நாளை (11) வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பில் அமைந்துள்ள பாசிக்குடா அமாயா பீச் ஹோட்டலில் நடைபெறும்.


இலங்கையின் வியட்நாம் தூதுவர் ஹோ தாய் தான் ஹுஸ் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கில், கிழக்கு மாகாண மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னணி தொழில் முயற்சியாளர்கள் 70 பேரளவு கலந்து கொள்ளவுள்ளதாக கருத்தரங்கின் ஏற்பாட்டாளரும் அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான ஹமீட் ஏ காதர் தெரிவித்தார்.


கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கௌரவ அதிதியாகக் கலந்து கொள்ளும் இக்கருத்தரங்கில், காத்தான்குடி பிரதேச சபையின் தலைவர் முஹம்மட் அஸ்வர் உட்பட பல பிரமுகர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

வியட்நாம் - இலங்கை வர்த்தக முயற்சிகளை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக தூதுவராலயம் நடாத்தும் 2ஆவது கருத்தரங்கு இதுவாகும். இதற்கு முன் கண்டியில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றதும் அது பல வெற்றிகரமான பலன்களை அளித்துள்ளதாகவும் ஏற்பாட்டாளர் ஹமீட் ஏ காதர் தெரிவித்தார்.




No comments

note