ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு நாளை மறுதினம் புத்தளம் நகரில்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு எதிர்வரும் 7ஆம் திகதி, திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு புத்தளம், கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இரு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இம் மாநாட்டில், நாடெங்கிலுமிருந்து கட்சியின் பேராளர்கள் கலந்து கொள்வர்.
அதற்கு முன்னதாக, நாளை 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கொழும்பில், கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உயர்பீடக்கூட்டம் நடைபெறவுள்ளதாகவும் அதன் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments