நிந்தவூர் அல் -அஷ்றக் கபடி அணியினர் வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் ஒக்டோபர் 29,30 ஆம் திகதிகளில் கேகாலையில் நடைபெற்ற கபடி போட்டியில், நிந்தவூர் அல் - அஷ்றக் தேசிய பாடசாலையின் 17 வயது கபடி அணியினர் வெள்ளி பதக்கமும், 20 வயது கபடி அணியினர் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
வரலாற்றில் முதல் முறையாக இரு வயதுப் பிரிவு கபடி அணிகளும் அகில இலங்கை மட்டத்தில் பதக்கம் வென்று சாதனை படைத்து வரலாற்றில் தடம் பதித்துள்ளனர்.
இவ்வகையில் இவ்வெற்றிக்கு காரணமாக இருந்த மாணவர்களையும் பயிற்சிகள் வழங்கிய பயிற்றுவிப்பாளர்களும் ஆசிரியர்களுமான ஏ. ஹலீம் அஹ்மத், எம்.எஸ்.எம். சபீர், ஏ.எம். அன்ஸார், இன்பாத் மௌலானா, ஆகியோருக்கும் விளையாட்டுக் குழு ஆசிரியர்களுக்கும் , வீரர்களின் பெற்றோர்களுக்கும் கல்லூரியின் அதிபர் ஏ. அப்துல் கபூர் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதேவேளை, பல வழிகளிலும் உதவிகள் புரிந்த பழைய மாணவர்கள் சங்க மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க குழு உறுப்பினர்களுக்கும் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
No comments