பகினிகஹவெல மண்ணின் முதல் பேராசிரியராக கலாநிதி ஆர்.ஏ.அஹமட் சர்ஜுன் விரிவரையாளர்.
மரஹும் ராஸிக் மௌலவி மற்றும் சித்தி பரரீதா தம்பதிகளின் அன்புப் புதல்வரான ஆர்.ஏ.சர்ஜுன் விரிவரையாளர் தனது ஆரம்பக் கல்வியினை மொ/ பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லூரியில் கல்வியைக் கற்று குர்ஆனை மனனம் செய்யும் பொருட்டு பட்டுபிடிய மத்ரசதுல் மின்ஹாஜியாவில் புனித அல் குர்ஆனை இளம் வயதில் மனனம் செய்து ஹாபிழ் பட்டம் பெற்றார்.
அதன் பின்னர் தனது தந்தையின் வழிகாட்டலின் மேலதிக கற்றலுக்காக கிழக்கு இலங்கை அரபிக் கல்லூரிக்கு சென்று அஙகு ஷரீஆ துறையில் பட்டம் பெற்றார். அக்கல்லூரியில் தனது க.பொ.த (சா/த), க.பொ.த (உ/த) பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்து உயர் கற்கைக்காக தென்கிழக்கு பல்கலைகழகத்திற்கு கலை கலாசார பீடத்திற்கு உள்வாங்கப்பட்டு, இஸ்லாமிய நாகரிக துறையில் முதல் தர சித்தியுடன் விஷேட கலைமானிப் பட்டம் பெற்று வெளியேறினார்.
2007-2008 ஆம் ஆண்டு மொ/பகினிகஹவெல முஸ்லிம் மத்திய கல்லுரியில் சிறிது காலம் தனது ஆசிரியர் பணியை மேற்கொண்டதோடு பேராதனை பல்கலைக்கழகத்தில் முதுகலைமானிப் பட்டம் பெற்றார்.
2009 ஆம் ஆண்டு தொடக்கம் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய நாகரிக பீடத்தின் தற்காலிக விரிவரையாளராக இனணந்து சேவையாற்றி, குறுகிய காலத்தில் தென்கிழ்கு பல்கலைக்கழகத்ததின் இஸ்லாமிய பீடத்தின் நிரந்தர விரிவரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்காலப்பகுதியில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாகத்துறையில் பட்டப் மேற்படிப்பினை நிறைவு செய்தார். மலேசிய பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய நாகரிக துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்.
அதனைத் தொடர்ந்து தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக தரமுயர்த்தப்பட்டு இஸ்லாமிய நாகரீக பீடத்துறையின் துறைத்தலைவராகி இன்று பேராசிரியராகிய கலாநிதி ஆர்.அஹமட் சர்ஜுன் அவர்கள் 2022.11.30 தென்கிழ்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் (பேராசிரியர்) மற்றும் கலாநிதி மஸ்ஹர் (நளிமீ) முன்னிலையில் பேராசிரியராக பட்டம் வழங்கி கௌரவகக்கப்பட்டார்..
கலாநிதி ஆர்.அஹமட் சர்ஜுன்(பேராசிரியர்) அவர்களின் இச்சாதனை பகினிகஹவெல என்ற தனது பிறப்பிடத்திற்கும் மொனறாகலை வாழ் முஸ்லிம் சமுகத்திற்கும் தனது அயராத முயற்சியின் காரணமாக தனது பெற்றோர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த முஸ்லிம் சமுத்திற்கும் , பேரழகு சேர்த்துள்ளார்.
ஏ.எச்.எம் சிஹார்
பகினிகஹவெல, மொனறாகலை
No comments