அமேசன் உயர்கல்வி நிறுவனத்திற்கு மற்றுமொரு அங்கிகாரம்
பம்பலபிட்டியில் அமைந்துள்ள அமேசன் உயர்கல்வி நிறுவனமானது இலங்கை அரசாங்கத்தின் மூன்றாம் நிலை கல்வி ஆணைக்குழுவுடனும் மற்றும் பல சர்வதேச அமைப்புகளுடனும் பதியப்பட்டு இணைந்து செயற்பட்டு வருகின்றது. இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல சர்வதேச பல்கலைக்கழகங்களுடனும் இணைத்து பல பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.
சர்வதேச ரீதியில் பல செயற் திட்டங்களை செய்து வருகின்ற SUNFO GLOBAL நிறுவனத்தின் அங்கீகாரம் அமேசன் உயர் கல்வி நிறுவனத்திற்கு 24/10/2022 அன்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கனக ஹெரத் அவர்களினால் BMICH இல் நடை பெற்ற நிகழ்வின் போது அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் திரு இல்ஹாம் மரிக்கார் அவர்களுக்கு உத்தியோக பூர்வ சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இதன் மூலம் அமேசன் நிறுவனத்திற்கு மேலுமொறு சர்வதேச அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு www.amazoncollege.lk என்ற வெப் தளத்தை நாடவும்.
No comments