சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவி ஸகீய்யா பானு தேசிய மட்டத்தில் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 12 ஆண்டில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவி ஏ.எப் ஸகீய்யா பானு தேசிய மட்ட போட்டியில் ஐந்தாம் பிரிவில் உள்ள இலக்கிய விமர்சன போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.
இவர் உதுமாலெப்பை அஸ்றப் ,அலியார் ஜுமானா தம்பதியின் மூத்த புதல்வியாவார்.இம் மாணவி தேசியமட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதையிட்டு பாடசாலை அதிபர் திருமதி யு.என்.ஏ ரஹீம் தலைமையில் பாரட்டி கெளரவிக்கும் நிகழ்வு நேற்று (08) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
அத்துடன் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
No comments