Breaking News

இம்ரான்கான் மீதான துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் கவலையளிக்கின்றது - எச்.எம்.எம்.றியாழ்

எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இன்று (03) குஜன்வாலா நகரில் பேரணியொன்றில் கலந்து கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


துப்பாக்கிச்சூடு காரணமாக வலது காலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி கேட்டு கவலையடைந்தேன்.


சிறந்த அரசியல் கலாசாரமொன்றை உருவாக்கும் நோக்கில், அரசியலில் நீண்ட முயற்சியின் பலனாக பாகிஸ்தானின் பிரதமரானார். நேர்மையான மனிதராக எல்லோராலும் அறியப்பட்ட இம்ரான் கான், உலக முஸ்லிம்கள் தொடர்பாகவும் கரிசனை கொண்டவராகத் திகழ்ந்தார்.


இலங்கை முஸ்லிம்களின் நீங்கா துயராக இருந்த கொரோனா ஜனாஸா எரிப்பு விவகாரத்தில், அதனை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இராஜதந்திரமாக நகர்வுகளை மேற்கொண்டு, இலங்கை வந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஜனாஸா எரிப்பு விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் இவரின் வருகையும் பிரதான காரணமாகப் பார்க்கப்பட்டது.


எனவே, இவ்வாறு மனிதநேயமிக்க ஒரு தலைவரின் வெற்றிடத்தை பாகிஸ்தான் மக்கள் உணரத்தொடங்கி, மக்கள் ஆதரவு அதிகரித்த சூழ்நிலையில், இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமுற்ற செய்தி கவலைகொள்ளச் செய்தது. 


இம்ரான்கான் விரைவாக குணமடைந்து,நேர்மையான அரசியலை பாகிஸ்தானில் முன்னெடுக்கவும், உலக முஸ்லிம்களின் விவகாரங்களில் அதிக கரிசனை கொண்டவராகச் செயற்படவும் இறைவன் அருள்புரிய வேண்டுமெனப் பிரார்திக்கிறேன்.


அன்னாரை நேசிக்கும் உள்ளங்களுக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எச்.எம்.எம்.றியாழ்.

பட்டயக்கணக்காளர், நிதி திட்ட ஆலோசகர்.





No comments

note