சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு புத்தளத்தின் முதல் தமிழ் மொழி மூல பாலர் பாடசாலையான IFM முன்பள்ளியின் 50 வது ஆண்டு நிறைவு பொன்விழாவோடு கூடிய, அதன் வருடாந்த டைனி டொட்ஸ் விளையாட்டு போட்டி நிகழ்வு!
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு புத்தளத்தின் முதல் தமிழ் மொழி மூல பாலர் பாடசாலையான IFM முன்பள்ளியின் 50 வது ஆண்டு நிறைவு பொன்விழாவோடு கூடிய, அதன் வருடாந்த டைனி டொட்ஸ் விளையாட்டு போட்டிகள் இன்று (3) புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் அதன் பொறுப்பாசிரியை எம்.எஸ்.பௌசுல் ரூஸி தலைமையில் மிக விமரிசையாக இடம்பெற்றது.
முன்பள்ளியின் முகாமைத்துவப் பணிப்பாளரும்,ஊடகவியலாளருமான எம்.யூ.எம் சனூன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி தொகுத்து வழங்கினார். நிகழ்வின் பிரதம அதிதியாக நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
50 மீட்டர் ஓட்டம், பழம் சேகரித்தல், பலூன் உடைத்தல், பூ கோர்த்தல், போத்தலில் நீர் நிறைத்தல், சாக்கு ஓட்டம், கால் கட்டி ஓட்டம், சீருடை அணிதல் உள்ளிட்ட பல போட்டிகள் இடம்பெற்றன.
போட்டிகளில் வெற்றியீட்டிய மற்றும் கலந்துகொண்ட அனைத்து சிறுவர்களுக்கும் அதிதிகளால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் கௌரவ அதிதிகளாக நகர சபை உறுப்பினர்களான ரனீஸ் பதூர்தீன், ஜௌபர் மரைக்கார்,bபர்வின் ராஜா, ஆரிப் சிஹான், ஜெமீனா இல்யாஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், கல்வி அதிகாரிகள், சமய தலைவர்கள், புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஏனைய முன்பள்ளிகளின் ஆசிரியைகள் மற்றும் பல கௌரவ அதிதிகளுடன் நகரசபை உயரதிகாரிகள் மற்றும் பெற்றோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பெற்றோருக்கான போட்டி மட்டுமன்றி அதிதிகளுக்கான போட்டிகளும் இடம்பெற்றமை சுவாரஸ்யமான விடயமாகும்.
No comments