Breaking News

கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் நியமனம்.

புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி பணிமனைக்குட்பட்ட பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக எஸ்.எம்.எம். ஹனிபா நியமிக்கப்பட்டுள்ளார்.


புதிய அதிபர்   தனது கடமைகளை  05/10/2022 அன்று உத்தியோகபூர்வமாக  பொறுப்பேற்றுக் கொண்டார். 


இதேவேளை புதிய அதிபரை கனமூலை பெரிய பள்ளியின் தலைவர் எச்.எச். நஜீம் (ஷர்கி), பாடாசாலை அபிவிருத்திச் சங்கம் உட்பட உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கம் உட்பட பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பெருந்திரளானோர் வரவேற்றனர்.


இந்நிகழ்வில் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம்.பைஸர் மரிக்கார் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.







No comments

note