வசந்தம், ஐ.ரி.என் தொலைக்காட்சிகளின் சிரேஸ்ட செய்தி ஆசிரியர் எம்.சித்தீக் ஹனீபாவுக்கு கௌரவம்
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் வரகாபொல பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியில் மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட ஊடகக் கருத்தரங்கின் போது, ஊடகத்துறையில் தன்னலம் கருதாது சிறப்பாகச் சேவையாற்றிவரும் ஐ.ரி.என். மற்றும் வசந்தம் தொலைக்காட்சியின் சிரேஷ்ட செய்தி ஆசிரியர் எம்.சித்தீக் ஹனீபாவின் சேவையைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்வின் பிரதம அதிதி வரகாபொல பிரதேச சபைத்தலைவர்
சரத் சுமன சூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எம்.பீ.எம்.சரீப், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ. இப்திகார், போரத்தின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம்.அமீன் ஆகியோரால் இவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
ஐ.ரி.என். மற்றும் வசந்தம் தொலைக்காட்சியின் சிரேஷ்ட செய்தி ஆசிரியர் எம். சித்தீக் ஹனீபா, தன் பிரதேச மாணவர்களுக்கு ஊடகக் கல்வியை அறிமுகப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக கருத்தரங்குகளை நடாத்துவதற்கு ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
படம் : அஷ்ரப் ஏ சமட்
No comments