கனமூலை பாடசாலை புதிய அதிபரை பொன்னாடை போத்தி வரவேற்ற கனமூலை தாருஸ்ஸலாம் நலன் புரிச் சங்கம்
கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள எஸ்.எம்.எம். ஹனிபா அவர்களை கனமூலை தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன் புரிச் சங்க தலைவர் எம்.எஸ்.எம். முஸ்ஸம்மில் தலைமையிலான குழுவினர் அதிபரை சந்தித்து கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலில் தாருஸ்ஸலாம் நலன் புரிச் சங்க செயலாளர் ஏ.எம்.அஸ்வர், பொருலாளர் எம்.ஐ.எம். அஷாம் உட்பட அதன் உறுப்பினர்கள் இன்று (10) பாடசாலைக்கு நேரில் சென்று சந்தித்து பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள், அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடினர்.
இதன் போது ஜனாஸா நலன் புரிச் சங்கத் தலைவர் எம்.எஸ்.எம்.முஸ்ஸமில் புதிய அதிபர் அவர்களை பொன்னாடை போத்தி வரவேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments