கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மீண்டும் தேசியத்தில் தங்கம் வென்று சாதனை
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக 'தைக்கொண்டோ' சுற்றுப் போட்டியில் பங்குபற்றி, 5 பதக்கங்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட 'தைக்கொண்டோ' சுற்றுப் போட்டி கடந்த 21,22,23 ஆகிய தினங்களில் கேகாலை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் கலந்து கொண்ட கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவர்கள், 1 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்களம் என மொத்தமாக தேசிய ரீதியில் 5 பதக்கங்களைப் பெற்று மாகாணத்திற்கும், வலயத்திற்கும், கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்துள்ளனர்.
இதில் 20 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 80 - 87kg எடைப் பிரிவில் ஜே.ஏ. சுமைட் தங்கப் பதக்கமும் 74 - 80 kg எடைப் பிரிவில் என்.எம்.நுஸ்ரி வெள்ளிப் பதக்கமும் 63-68 kg எடைப் பிரிவில் ஏ.எல்.எம்.அப்ரி வெண்கலப் பதக்கத்தையும் + 87 kg எடைப் பிரிவில் ஏ.எம்.நாஸிக் அன்சாப் வெண்கல பதக்கத்தையும், 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான +74kg எடைப் பிரிவில் ஜே.ஏ.சுரைப் வெள்ளிப் பதக்கமும் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இவ் வரலாற்று வெற்றியைப் பெற உறுதுணையாய் இருந்து, மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கிய கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் (SLEAS), தமது உச்ச திறமைகளை வெளிப்படுத்தி இவ்வெற்றிகளைப் பெற்ற மாணவர்களையும், மாணவர்களைப் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் யூ.எல்.எம்.இப்றாஹீம், உதவி பயிற்றுவிப்பாளர்களான ஏ.ஏ. சிஹாப், எம்.எச்.ஏ.ஹஸீன், ஏ.ஏ.ஹம்தான், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.அமீர், உடற்கல்விப் பிரிவு ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள், ஆகியோரைப் பாராட்டி பாடசாலை சமூகம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
இப் பாடசாலை இப்போட்டியில் கலந்து கொண்டமை இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments