கோலாகலமாக இடம்பெற்ற கடையாமோட்டை தேசிய பாடசாலையின் ஆசிரியர் தின நிகழ்வு!.
புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி பணி மனைக்குட்பட்ட பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் ஆசிரியர் தின நிகழ்வு கடந்த (17) பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், முந்தல் மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவருமான ஏ.எச்.எம். ஹாரூன் அவர்களின் பூரண பங்களிப்புடன் பாடசாலை கல்வி அபிவிருத்திக் குழு செயலாளர் சீ.எம்.தாவூத் உட்பட உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் ஜே.ஏ.ஜெஸீர் உட்பட உறுப்பினர்கள் இணைந்து மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் தின விழா மதுரங்குளி தொடுவா வீதியில் அமைந்திருக்கும் "ட்ரீம் செண்டரில்" (DREAM CENTET) கோலாகலமாக இடம்பெற்றது.
பாடசாலையின் முதல்வர் எம்.எச்.எம். தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம். றியாஸ், சிறப்பு அதிதியாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார், அதிதிகளாக தைபா பவுண்டேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.ஆர்.எப். பர்ஷாத் (மதனி), VICTORY FIBER EXPORT (Pvt) LTD உரிமையாளர் எம்.ஐ. ஐயூப்கான், ட்ரீம் செண்டர் உரிமையாளர் நஸ்முதீன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஆசிரியர்களை வாழ்த்தி மாணவர்களின் பல வகையான நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, ஆசிரியர்களின் கலை , கலாச்சார நிகழ்ச்சிகளும் அரகேற்றப்பட்டன. இதில் மாணவர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் சகல ஆசிரியர்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை கல்வி அபிவிருத்திக்குழு ஆகியோரினால் ஏற்பாடு செய்திருந்த நினைவுப் பரிசில்கள் ஆசிரியர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிகள் யாவும் பகல் 2.30 மணிக்கு நிறைவுற்றது.
பழைய மாணவர் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த மதிய போசனத்தில் அணைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இப்பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்த ஏற்பாட்டுக் குழுவினருக்கு அதிபர், ஆசிரியர்கள் நன்றி தெரிவித்தனர்.
KMCC (NS) MEDIA UNIT
No comments