நீர் கொழும்பு தாருல் புர்கான் அல் கரீம் அரபுக் கல்லூரியின் பரிசளிப்பு விழா
நீர்கொழும்பு தாருல் புர்கான் அல் கரீம் அரபுக் கல்லூரியின் வருடாந்த கலை கலாசார விளையாட்டு போட்டிகளின் பரிசளிப்பு விழா மற்றும் மீலாதுன் நபி விழா சூரா சபைத் தலைவர் அஷ்ஷேக் பரூத் (இஹ்சானி ) தலைமையில் அல் ஹிலால் கேட்போர் கூடத்தில் கடந்த 22ம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.
சிறப்புப்பேச்சாளர்களாக அஷ்ஷேய்க் ஹஸன் பரீத் (பின்னூரி) அவர்களும் ஆபத்தான பொருட்களின் கட்டுப்பாட்டு சபை இனைப்பாளர் உளவியலாளர் MMGBM ரஷாட் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
அதீதிகளாக மௌலவிகளான ஹனீபா (கியாதி) நூருல் ஹஸன் (ஹாஷிமி) சப்ரி (ஹஸனி) சிறாஜ் (நுளாரி) நிஸ்மி ( மனாரி)ஆகியோருடன் உலமாக்கள் கல்லூரி முன்னாள் இந்நாள் உஸ்தாதுமார்கள் மாணவர்கள் சூரா சபை உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தாருல் புர்கான் அதிபர் மௌலவி ஹாபிழ் ஹிசாம் நிகழ்வை ஒருங்கிணைப்புச்செய்ய ஷாம் மௌலானா தொகுத்து வழங்கினார்.
தகவல்
ஷாம் மௌலானா
No comments