Breaking News

பு/ கஜுவத்தை அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வு!.

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி பணி மனைக்குட்பட்ட கஜுவத்த அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழா கடந்த 7ஆம் திகதி பாடசாலையின் அதிபர் அஷ்ஷேய்க் இஸட். ஏ. சன்ஹீர் (கபூரி) தலைமையில் மிக விமர்சையாக இடம்பெற்றுள்ளது.


பாடசாலையின் வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விஷேட அதியாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ. ஆஷிக் கலந்து சிறப்பித்தார்.


இந்நிகழ்வில்  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த முஹம்மது இஸ்ஸதீன் பாதிமா இஹ்லா என்ற மாணவியும்' இப்பாடசாலையில் ஆரம்பக்கல்வியைக் கற்று  பல்கலைக்கழகத்தில் வைத்திய துரைக்கு தெரிவு செய்யப்பட்ட முஹம்மது ரூமி முஜிபுர் ரஹ்மான், மற்றும் முன்னாள் அதிபர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு நினைவுச் சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி கெளறவிக்கப் பட்டனர்.


ஆசிரியர் தின நிகழ்வை பாடசாலை அபிவிருத்தி சங்கமும், ரெட்பானா பள்ளிவாசல் நிர்வாகமும் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.











No comments

note