விருதோடை அல் மதீனா விவசாய சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சிரமதானம்!
விருதோடை அல் மதீனா விவசாய சங்கத்தின் ஏற்பாட்டில் மல்லம் பிட்டி தொடக்கம் விருதோடை வரையான பிரதான பாதை இன்று (13) சிரமதானம் செய்து சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
மல்லம்பிட்டி தொடக்கம் விருதோடை வரையிலான பிரதான பாதை இருபக்கமும் பற்றைக் காடுகளாக காணப்பட்டதை விருதோடை அல் மதீனா விவசாய சங்கத்தினர் கல்பாட்டி பிரதேச சபை தலைவர் ஏ.எம். இன்பாஸ் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். அதன் பிரதி ஒன்றை புத்தளம் பிரதேச சபை தலைவர் அஞ்சன சந்த ருவண் அவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
விவசாய சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க கல்பிட்டி பிரதேச சபை தலைவர் நான்கு ஊழியர்களும், ஒரு உழவு இயந்திரம் (டெக்டர்) தந்துதவியதாகவும், புத்தளம் பிரதேச சபை தலைவர் பதினைந்து ஊழியர்கள் ஒரு உழவு இயந்திரம்(டெக்டர்) ஒரு லொறி தந்துதவியதாக கல்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும், விருதோடை அல் மதீனா விவசாய சங்க தலைவருமான எம்.ஆர்.எம். ரபாத் அமீன் தெரிவித்தார்.
இதேவேளை இச்சிரமதானத்திற்கு கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம். ஆசிக், நிஹால், ஸ்டேன்ளி மற்றும் முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். ஜெஸீம் மற்றும் முந்தல் பிரதேச செயலாளர் சார்பாக ஒரு அதிகாரியும், விருதோடை கிராம சேவையாளர், விருதோடை ஜும்ஆ பள்ளி தலைவர், சேனைக்குடியிருப்பு ஜும்ஆ பள்ளி தலைவர், விருதோடை பாடசாலை சார்பாக பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், அல் மதீனா விவசாய சங்க உறுப்பினர்கள்,விருதோடை சமுர்த்தி உத்தியோகத்தர், ஊர்மக்கள் ஆகியோரின் பங்கு பற்றலோடு இடம்பெற்றுள்ளது.
இப்பாதை கல்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட பாதை என்பது குறிப்பிடத்தக்கது.
சிரமதானத்திற்கு முன்னர் கானப்பட்ட பாதை
No comments