சர்வதேச சிறுவர் தின வெற்றிக் கேடயம் 2022
ஹிஸாம் ஏ பாபா, நூருள் ஹுதா உமர்
சகல பிள்ளைகளுக்கும் சிறந்ததொரு எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிற்பதற்கான இளைஞர் முன்னணி ( AYEVAC) நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களில் ChildFund நிறுவனத்தோடு இனைந்து ஏற்பாடு செய்துள்ள சிறுவர் தின நிகழ்வுகளில் அம்பாறை மாவட்ட நிகழ்வுகள் தேசிய இனைப்பாளர் என்.ஜே.செரோன் அனாஸ் இன் வழிகாட்டலில் சம்மாந்துறை முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் Spartans Sports Club மற்றும் Spartans Sports Academy சிறுவர்களுக்கு உதைபந்தாட்ட போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் அதிதிகளாக வைத்தியர் எம்.என்.எம். தில்ஷான், சம்மாந்துறை கெப்ஸோ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.ஜே.காமில் , Spartans விளையாட்டு கழக தலைவர் எம்.என்.எம்.எச். அர்கம் உள்ளிட்ட அணியினர் கிராம சேவகர்களான ஏ.வி.எம். றமீஸ் , எம்.உதய ராஜன், ஓய்வு பெற்ற தபால் அலுவலகர் ஏ.எல்.எம். பஷீர் AYEVAC மாவட்ட பிரதிநிதிகளான ஹிஸாம் ஏ பாவா , சி.எம்.எம். சப்னாஸ், எம்.ஜப்ரான், எம். சர்பான் எம்.டி.ஏ.அன்பாஸ் என பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் சிறுவர்களின் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பில் Gafso அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.ஜே. காமில் உரையாற்றியதை தொடர்ந்து வைத்தியர் எம்.என்.எம். தில்ஷான் விளையாட்டின் மூலம் ஆரோக்கியமான சிறுவர் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினார். அதிதிகளால் சிறுவர்களுக்கு வெற்றிக் கேடயம் மற்றும் கிண்ணங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
No comments