Breaking News

பெண் தலைவர்களுக்கான டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் வேலைத்திட்டம்

(எம்.என்.எம்.அப்ராஸ்)

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் ‘கபே' தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில்  முன்னெடுக்கெப்படும் பெண் தலைவர்களுக்கான'ஜனனி' டிஜிட்டல் அறிவை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட செயலமர்வு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) தேசிய  நிறைவேற்றுபணிப்பாளர்  அஹமட் மனாஸ் மக்கீனின் நெறிப்படுத்தலில் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல்.அப்துல்அஸீஸ் அவர்களின்  இணைப்பில் கல்முனை ஹிமாயா வீச் ரிசோட்டில் இன்று (04) இடம்பெற்றது .


குறித்த செயலமர்வில் பெண் தலைமைகள் மேடைப்பேச்சுக்களையும், ஊடாக அறிக்கையிடல்களையும் மேற்கொள்ளுதல் எவ்வாறு என்பது தொடர்பாகவும்,தேர்தல் பிரச்சாரங்களுக்கு சமுக ஊடகங்களைபயன்படுத்தும் விதம் தொடர்பாகவும் விரிவுரை இடம்பெற்றது.


இதில் வளவாலர்கலாக ஜனநாயக மறு சீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கை நெறிக்கான நிறைவேற்றுப்பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க, ஊடக பயிற்றுவிப்பாளரும் ஆய்வாளருமான ஊடகவியலாளர் கலாவர்சனி கனகரத்தினம் ஆகியோரும்,மொழிபெயர்ப்பாளர் எம்.சாஜகான் இதன் போது கலந்து கொண்டனர்.










No comments

note