Breaking News

கடையாமோட்டை தேசிய பாடசாலையின் பிரதான நுழைவாயில் திறந்து வைப்பு!

பு/கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டுள்ள  புதிய பிரதான நுழைவாயில் இன்று (26) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.


பாடசாலையின் அதிபர் எம்.௭ச்.எம்.தௌபீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நுழைவாயில் அமைப்பதற்கு நிதி அன்பளிப்பு செய்த  பாடசாலையின் பழைய மாணவரும் Kinglux (Pvt) Ltd நிறுவன உரிமையாளருமான நல்லாந்தழுவையை பிரப்பிடமாகவும் தற்போது கொழும்பில் வசிப்பிடமாகவும் கொண்ட தொழிலதிபர் எம்.ஆர். இம்ரான் அவர்வள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.


பாடசாலையின் முதல்வர் எம்.எச்.எம். தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், முந்தல் மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவருமான ஏ.எச்.எம்.ஹாரூன், பாடசாலை விஞ்ஞான அபிவிருத்திக் குழு செயலாளர் சீ.எம். தாவூத் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,  பங்கு பற்றலோடு இடம்பெற்றது.


இதேவேளை எம்.ஆர்.இம்ரான் அவர்கள் பாடசாலை கண்காணிப்பாளர்  அறை (Security  Room) க்கான மின்சாரத்தை பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 KMCC (NS) MEDIA UNIT



















No comments

note