சம்மாந்துறையில் இளைஞர் மன்றம்.
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று பிரதேச செயலகங்களில் வசிக்கும் இளைஞர் யுவதிகளின் திறன் விருத்தி மற்றும் சமூகமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஒன்று சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபாவின் தலைமையில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
எதிர்காலத்தில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் சமூக சேவை பிரிவுடன் இளைஞர்களையும் இனணத்து திறன் விருத்தி மற்றும் சமூகம் சார்ந்த விடயங்களில் பங்களிப்பை சம்மாந்துறை பிரதேசத்தில் வழங்கி இளைஞர் சார் செயற்பாடுகளையும் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் சமூக ஆர்வலர்களை உருவாக்குவதே நோக்கமாகும்.
இக்கூட்டத்தில் GAFSO நிறுவன திட்டப்பணிப்பாளர் ஏ.ஜி.காமில் இம்தாத், பிரதேச செயலக அலுவலகர்கள் மற்றும் ஏனைய இளைஞர்துறை சார் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
No comments