Breaking News

மறைந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர் புவனேஸ்வரிக்கு கல்முனை மாநகர சபையில் இறுதி அஞ்சலி!

நூருல் ஹுதா உமர் 

அண்மையில் காலம்சென்ற கல்முனை மாநகர சபை உறுப்பினர் புவனேஸ்வரி விநாயகமூர்த்தி அவர்களின் பூதவுடல் கல்முனை மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் இறுதி அஞ்சலிக்காக இன்று ஞாயிறு (18-09-2022) காலை 9.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை மாநகர சபையின் சபா மண்டபத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. 


கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரங்கல் கடிதம் சபையில் வாசிக்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக கலந்துகொண்ட ஐ.தே.கட்சியின் முக்கியஸ்தர்களினால் கையளிக்கப்பட்டது. அத்துடன் மாநகர முதல்வர், உறுப்பினர்கள் சிலரால் இரங்கல் உரைகளும், இரங்கல் கவிதையும் வாசிக்கப்பட்டது.  


இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், பிரதேச முக்கிய பிரமுகர்கள், ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் யூ.எல். ஆதம்லெப்பை, அவரது குடும்பத்தினர், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.









No comments

note