மதுரங்குளி மீடியாவினால் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு!
மதுரங்குளி மீடியா ஏற்பாட்டில் புத்தளம் - தெற்கு கோட்டக் கல்வி காரியாலயத்திற்கு உட்டபட்ட (தமிழ் மொழி) பாடசாலையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (09) மதுரங்குளி தொடுவா வீதியில் அமைந்திருக்கும் "ட்ரீம் செண்டரில்" மிக விமர்சையாக இடம்பெற்றது.
பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் என்.எம்.எம்.நஜீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் எச்.ஏ.எல்.பீ. ஹப்பு ஆராய்ச்சி அவர்களும், விஷேட அதிதியாக புத்தளம் - தெற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜீவிகா சந்திரசேகர அவர்களும், கௌரவ அதிதியாக கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார் மற்றும் பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், கனமூலை பெரிய பள்ளியின் தலைவர் அஷ்ஷேய்க் எச்.எச். நஜீம் (ஷர்கி), சேனைக்குடியிருப்பு ஜும்ஆப் பள்ளி தலைவர் ஏ.ம். இஸ்மத், உலமாக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது எட்டு பாடசாலைகளிலிருந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 42 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னம் வழங்கியதோடு, சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற பாடாசாலைகளுக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பு/ஒற்றப்பனை ரோமன் கத்தோலிக்க வித்தியாலய மாணவர்களும், பாடசாலைக்கான நினைவுச் சின்னத்தை பாடசாலையின் ஆசிரியர் பெற்றுக் கொண்ட போது.
பு/கொத்தான்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களும், பாடசாலைக்கான நினைவுச் சின்னத்தை பாடசாலையின் ஆசிரியர் பெற்றுக் கொண்ட போது.
பு/ சமீரகம முஸ்லிம் ஆரம்ப பாடசாலை ஒரு மாணவனும், அதிபரும் பெற்ற புகைப்படம் கிடைக்கவில்லை
பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களும், பாடசாலைக்கான நினைவுச் சின்னத்தை பாடசாலையின் பிரதி அதிபர் பீ.எம்.முஸ்னி அவர்கள் பெற்றுக் கொண்ட போது.
பு/நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் மாணவர்களும், பாடசாலைக்கான நினைவுச் சின்னத்தை பாடசாலையின் அதிபர் என்.எம்.எம். நஜீப் அவர்கள் பெற்றுக் கொண்ட போது.
புழுதிவயல் அரசினர் முஸ்லிம் பாடசாலை மாணவர்களும், பாடசாலைக்கான நினைவுச் சின்னத்தை பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம். றிபாய்தீன் அவர்கள் பெற்றுக் கொண்ட போது.
No comments