Breaking News

கடையாமோட்டை தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 300 அடி நீளமான சுற்று மதில் திறந்து வைப்பு!

பு/கடையாமோட்டை தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 300 அடி நீளமான சுற்று மதில் இன்று (26) வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.


பாடசாலையில் கல்வி கற்ற க.பொ.த. உயர் தரம் (2019/2021) மாணவர்களின் பங்களிபுடனும், பாடசாலை அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்களது பிரதான அனுசரணையில் நிர்மாணிக்கப்பட்டு அதிபரினால் இன்று (27) மதிலில் பொதிக்கப்பட்டுள்ள நினைவு படிகத்தை திரை  நீக்கம் செய்து வைத்தார்.


பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற  இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், முந்தல் மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைருமான ஏ.எச்.எம்.ஹாரூன், பாடசாலை விஞ்ஞான அபிவிருத்திக் குழு செயலாளர் சீ.எம். தாவூத் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.



 KMCC (NS) MEDIA UNIT











No comments

note