Breaking News

மதுரங்குளி மீடியாவின் பரிசளிப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் - 2022

மதுரங்குளி மீடியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இஸ்லாமிய வினா - விடை போட்டி நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் எதிர்வரும் 08 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் என்.எம்.எம். நஜீப் தலைமையில் இடம்பெறவுள்ளது.


இதன்போது கடந்த ரமழான் மாதத்தில் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சியில் பங்கு பற்றி வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களில் அன்றைய தினம் குளுக்கள் முறையில் அதிஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு பணப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.


இதேவேளை 2021 தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்குமுகமாக சான்றிதழும், நினைவுச் சின்னமும் வழங்க ஏற்பாடு செய்யப்படுள்ளது.


மேலும் 2021 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் நடைபெற்ற போட்டியில் அதிஷ்டசாலிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் பணப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது.


எனவே  அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். 


 காலம்:- 08/09/2022 வியாழக்கிழமை 


நேரம் :- மாலை 3.00 மணி 


இடம்:- "ட்ரீம் செண்டர்"  DREAM CENTER 



 நன்றி

விழா ஏற்பாட்டுக் குழு

மதுரங்குளி மீடியா




No comments

note