Breaking News

156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இடம்பெற்றசினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப் போட்டியில் வென்ற பொலிஸ் அணி

(யூ.கே.காலித்தீன், எம்.என்.எம்.அப்ராஸ்)

156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப் போட்டியில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை அணியை வீழ்த்தி பொலிஸ் அணி வெற்றியடைந்தது கிண்ணத்தை சுவிகரித்தது


156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  சினேக பூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் மைதானத்தில் இடம்பெற்றது. 


கிரிக்கட் சுற்றுப் போட்டியானது சாஹிராக் தேசிய பாடசாலை அதிபர் எம்.ஐ. ஜாபீர் மற்றும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி யூ.எல். சம்சுடீன் ஆகியோர் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை நடைபெற்றது.


மேற்படி நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம். டி. ராஜித ஸ்ரீ தமிந்த பிரதம அதிதியாகவும், அம்பாறை மாவட்ட பதில் பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.எ.பி.ஹேரத்,மற்றும் கல்முனை கல்வி வலய அதிகாரி சஹ்துல் நஜீம் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.புத்திக ஆகியோர் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டனர். 


10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப் போட்டியானது பொலிஸ் அணியினரை எதிர்த்து கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை   ஆசிரியர்களுக்கிடையிலான போட்டிசாஹிராக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. 


நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய பொலிஸ் அணியினர் தனது அணியினை களத்தடுப்பினை எடுக்க கல்லூரி ஆசிரியர் அணியினர் மட்டுப்படுத்தப்பட்ட 10 ஓவர்கள் மிடிவில் 5 விக்கட்டுக்களை இழந்து 89 ஓட்டங்களுகளை மாத்திரம் பெற்றனர். 


90 ஓட்டங்களை இழக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பொலிஸ் அணியினர் 8 ஓவர்கள் முடிவில் 1 விக்கட்டினை இழந்து 91 ஓட்டங்களை பெற்று பொலிஸ் அணியினர் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர்.


சுற்றுப் போட்டியில் 16பந்துகளுக்கு 33 ஓட்டங்களை பெற்றதோடு சிறந்த களத்தடுப்பினை ஏற்படுத்திய  டி.எம்.பி.டி. சேனாதீனே ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டதோடு, 26 பந்துகளுக்கு 46 ஓட்டங்களை பெற்ற  எம்.எம். ரஜீப் போட்டியின் சிறந்த துடுபெடுத்தாட்ட வீரராகவும்,  2 ஓவர்களுக்கு 21 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுக்களை கைப்பற்றிய டப்லியு.எம்.நாமல் குமாரே வனசிங்க சிறந்த பந்து வீச்சாளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.


இச்சுற்றுப்போட்டியில் பொலிஸ் மேலதிகாரிகள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.











No comments

note