கல்முனை வலய கல்விப்பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவை முதலாம் தர அதிகாரி எம்.எஸ் சஹதுல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நூருல் ஹுதா உமர்
கல்முனை வலய கல்வி பணிப்பாளராக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் சஹதுல் நஜீம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணகல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் ஆகியோரிடமிருந்து நியமன கடிதங்கள் கிடைக்க பெற்றிருக்கின்றது . மருதமுனையை சேர்ந்த எம்.எஸ் சஹதுல் நஜீம், இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரி ஆவார்.
விஞ்ஞான பட்டதாரியான நஜீம் விஞ்ஞான முதுமாணி கல்வி முதுமாணிப் பட்டங்களை பெற்றுள்ளார் . 15 வருட கல்வி நிர்வாக சேவை யிலுள்ள நஜீம் நாளை பத்தாம் தேதி முதல் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக பதவி ஏற்கிறார் .
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளருக்கான நேர்முகப் பரீட்சை கடந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி திருகோணமலையிலுள்ள மாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது . நேர்முக தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதன்படி இந் நியமனம் இடம்பெற்றது . 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி இலங்கை கல்வி கல்வி நிர்வாக சேவையிலே இணைந்து கொண்ட அவர் , கடந்த 2019 மூன்றாம் மாதம் 12ஆம் தேதி தரம் 1 க்கு பதவி உயர்த்தப்பட்டார் .
சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனைக்கு 2014 மார்ச் மாதம் மூன்றாம் தேதி நியமிக்கப்பட்டார் . சம்மாந்துறை வலயத்தில் அதி கூடிய 8 அரை வருடங்கள் சேவையாற்றி நாளை பத்தாம் தேதி கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக பதவி ஏற்கிறார் . நஜீம் மும்மொழியிலும் தேர்ச்சி பெற்ற ஒரு சிறந்த நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது .
No comments