வழக்கு விசாரணை நவம்பருக்கு ஒத்திவைப்பு!
டிபென்டர் ஒன்றில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் மேலதிக விசாரணையை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததுடன், அவரது சிரேஷ்ட சட்டத்தரணி அஷான் பெர்னாண்டோ சுகயீனமடைந்துள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு வேறொரு திகதியை வழங்குமாறு கோரினார்.
இதனையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 16ஆம் ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அன்றைய தினம் சாட்சியை ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
No comments