Breaking News

சுதந்திரக் கட்சிக்குள் விரிசல் மைத்திரியை நீக்க நடவடிக்கை

நாட்டில் இடம்பெற்று வரும் அரசியல் நெருக்கடி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உள்ளும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீக்க திரை மறைவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதன் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க செய்படுவதாகவும் மைத்திரிப்பால சிறுசேனவுக்கு பதிலாக கட்சியின் வேறொரு சிரேஷ்ட தலைவரை இக்கட்சியின் தலைவராக நியமிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கட்சி யாப்பின் பிரகாரம் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் அவர் கட்சியின் தலைவராக தகுதி பெறுகிறார் ஆனால் நாட்டின் ஜனாதிபதி பதவியில் இருந்து அவர் நீங்கிய பின் கட்சி தலைவராகும் தகுதியையும் அவர் இழக்கிறார்.  இதன்படி  கட்சி யாப்புக்கு இணங்க புதிய தலைவரை தெரிவு செய்ய வேண்டும் என்ற வாதம் கட்சியின் முக்கியஸ்தர்கள் இடையே நிலவி வருகிறதாம்.




No comments

note