மகனைக் கத்தியால் கொலை செய்வதாக பாசாங்கு செய்த தந்தை கைது
வெளிநாடு சென்றுள்ள தனது மனைவியை வரவழைத்துக் கொள்வதற்காக தனது 5 வயதான மகனின் கழுத்தில் கத்தியை வைத்து வெட்டுவதற்கு ஏத்தனிப்பது போல் பாசாங்கு செய்த தந்தை ஒருவரை குளியாபிட்டிய பொலீசார் கைது செய்துள்ளனர்.
இச்செயற்பாட்டால் அச்சத்தில் மகன் கூக்குரலிடும் வீடியோ பதிவை இவர் தனது மனைவிக்கும் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர் நிலையத்துக்கும் அனுப்பி வைத்துள்ளார். இத்தகவலை அறிந்த பொலீசார் அவரை நேற்று கைது செய்துள்ளனர்.
இதே வேளை குறிப்பிட்ட தந்தையுடன் அவரது மகன் செல்ல மறுப்புத் தெரிவிப்பதால் தாய் திரும்பி வரும் வரை சிறுவனை உறவினர் பாதுகாப்பில் வைக்க பொலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
No comments