கடையாமோட்டை தேசிய பாடசாலையில் மாலை நேர மேலதிக வகுப்புக்கான நிதி அன்பளிப்பு.
பு/கடையாமோட்டை தேசிய பாடசாலையில் மாலை நேர மேலதிக வகுப்புக்கான நிதி மூன்று அமைப்புகள் இணைந்து தலா ஒரு இலட்சம் வீதம் மூன்று இலட்சம் 300,000/= ரூபா அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் தோற்றவுள்ள மாணவர்கள் நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரமாக பாடசாலை சீராக நடைபெறாத காரணத்தினால் மாணவர்கள் கல்வி கற்றலில் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதனை பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்கள் பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.
அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளரும், முந்தல் மதுரங்குளி பல நோக்கு கூட்டுறவுச் சங்க தலைவருமான ஏ.எச்.எம். ஹாரூன் அவர்களின் முயற்சாயால் இந்நிதி பெறப்பட்டுள்ளது.
அந்தவகையில் புத்தளம் தூயதேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் எஸ்.எம். இஷாம் மரிக்கார் 100,000/= ரூபாவும், குவைத் - கடையாமோட்டை தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் 100,000/= ரூபாவும், அக்கறைப்பற்று உதவி மையம் 100,000/= ரூபாவும் அன்பளிப்பு செய்துள்ளனர்.
குறித்த நிகழ்வானது நேற்று (08) பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புத்தளம் தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் எஸ்.எம். இஷாம் மரிக்கார், குவைத் கடையாமோட்டை தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளரும், அக்கறைப்பற்று உதவி மையத்தின் செயலாளருமான எம்.ஏ.எம். சர்ஜூன் ஆகியோர் நிதியை அதிபரிடம் கையளித்தனர். இதன்போது பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.எச்.எம். ஹாரூன்,பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை நிதி அன்பளிப்பு செய்த புத்தளம் தூய தேசத்திற்கான தலைவர் எஸ்.எம்.இஷாம் மரிக்கார், குவைத் கடையாமோட்டை பழைய மாணவர் சங்க செயலாளரும், அக்கரைப்பற்று உதவி மையத்தின் செயலாளருமான எம்.ஏ.எம். சர்ஜூன் ஆகியோருக்கு பாடசாலை சார்பில் அதிபரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிதி அன்பளிப்பு செய்த எஸ்.எம். இஷாம் மரிக்கார், குவைத் கடையாமோட்டை தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.ஏ.எம். சர்ஜூன் உட்பட சங்க உறுப்பினர்கள் ஆகியோருக்கு பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை விஞ்ஞான அபிவிருத்தி குழு, பழைய மாணவர்கள் சங்கம் ஆகியோர் உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துள்ளனர்.
جز١ك الله خير١ وخيرا جزاء
K.M.C.C. (N.S) MEDIA UNIT
No comments